TNPSC General Tamil: Sanga Ilakkiyam, Important Questions & Answers (81-90)
TNPSC பொதுத் தமிழ்: சங்க இலக்கியம்
Important Questions & Answers 81-90
ஐங்குறுநூறு
81. திணை ஒன்றுக்கு 100 பாடல்கள் வீதம் 5 திணைகளுக்கு 500 பாடல்கள் பெற்று விளங்கும் நூல்
- ஐங்குறுநூறு
82. ஐங்குறுநூறு பாடிய புலவர்கள் யாவர்?
- ஐந்து திணைகளுக்கு ஐந்து புலவர்கள்
- குறிஞ்சி - கபிலர்
- முல்லை - பேயனார்
- மருதம் - ஓரம்போகியார்
- நெய்தல் - அம்முவனார்
- பாலை - ஓதலாந்தையார்
83. ஐங்குறுநூறை தொகுத்தவர்?
- புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
84. ஐங்குறுநூறை தொகுப்பித்தவர்?
- யானைகட் சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறை
85. தாய்முகம் நோக்கியே ஆமைக்குட்டிகள் வளரும் என்ற உண்மையையும், முதலை தம் குட்டிகளையே கொன்று தின்றுவிடும் என்னும் செய்தியையும் விளக்கும் நூல்
- ஐங்குறுநூறு
கலித்தொகை
86. “ஓசை இனிமை, தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம்” என்னும் சிறப்பான இசை அமைப்புகளை கொண்டது
- கலித்தொகை
87.. கலித்தொகை பாடிய புலவர்கள் யாவர்? பாடல்கள் எத்தனை?
- 150 பாடல்கள்
- குறிஞ்சிக் கலி(29) - கபிலர்
- முல்லைக் கலி(17) - நல்லுருந்திரன்
- மருதம்(35) - மருதனிளனாகனார்
- நெய்தல்(33) - நல்லந்துவனார்
- பாலை(35) - பெருங்கடுங்கோ
88. கலித்தொகையை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டவர்
- சி.வை.தாமோதரம்பிள்ளை (1887)
89. மார்கழி நோன்பு, தமிழ் சங்கம், காமன் வழிபாடு, முருகன் அறுபடை வீடு, திருமால், துரியன், வீமன், இராவணன் போன்ற செய்திகள் இடம் நூல்
- கலித்தொகை
90. “பழமொழிப் பாங்கில் ஒரே வரியில் அறக்கருத்துக்கள்”, “நவமணிகள் போன்ற ஒன்பது கருத்துக்கள்” அறிவுறு்த்தும் நூல்
- கலித்தொகை
0 comments:
Post a Comment