TNPSC Current Affairs: Sports - கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி 2016
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி
- உலகக் கோப்பை, ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு அடுத்து புகழ்பெற்றது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி. தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள அணிகள் இதில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வெல்ல மோதும்.
- இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 45-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடர் அமெரிக்காவில் 03.06.2016 தொடங்குகிறது. போட்டிகள் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 32 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.
- தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆவதையொட்டி இம்முறை கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் சிறப்பான வகையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தென் அமெரிக்க கண்டத்தை சேராத நாடு போட்டியை நடத்துவதும் இதுவே முதன் முறை.
- 45-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடரில் தென் அமெரிக்க கண்டங்களை சேர்ந்த 10 அணிகளும், வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா, கரீபியன் தீவுகளை சேர்ந்த 6 அணிகளும் கலந்து கொள்கின்றன.
- தொடரில் பங்கேற்கும் நடப்பு சாம்பியனான சிலி, அர்ஜென்டினா, பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈக்வெடார், பராகுவே, பெரு, உருகுவே, வெனிசுலா ஆகியவை தென் அமெரிக்க கண்டங்களை சேர்ந்த அணிகளாகும். வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா, கரீபியன் தீவுகளை சேர்ந்த அணிகளாக அமெரிக்கா, மெக்ஸிகோ, கோஸ்டா ரிகா, ஜமைக்கா, ஹைதி, பனாமா ஆகியவை பங்கேற்கின்றன.
- இந்த கால்பந்து திருவிழாவில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் அர்ஜென்டினா, பிரேசில், மெக்ஸிகோ, அமெரிக்கா அணிகளும், 'பி' பிரிவில் சிலி, கொலம்பியா, உருகுவே, ஈக்வெடார் அணிகளும், 'சி' பிரிவில் கோஸ்டா ரிகா, ஜமைக்கா, பனாமா, ஹைதி அணிகளும் 'டி' பிரிவில் பராகுவே, பெரு, பொலிவியா, வெனிசுலா அணிகளும் இடம் பெற்றுள்ளன.
0 comments:
Post a Comment