About & Social

Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC Current Affairs May 8-14, 2016 (Weekly Current Affairs in Tamil)

நடப்பு நிகழ்வுகள் மே 8-14, 2016
CURRENT AFFAIRS MAY 8-14, 2016 (TAMIL)
நடப்பு நிகழ்வுகள்:உலகம்


1. சூரிய மண்டலத்துக்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள்


  • சூரிய மண்டலத்துக்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் இருப்பதை, நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.


  • கெப்ளர் தொலைநோக்கியின் புதிய கிரகங்களின் கண்டுபிடிப்புகள் குறித்து கடந்த ஜூலை 2015-ம் ஆண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அப்போது மொத்தம் 4,302 கிரகங்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றில் 1,284 கிரகங்கள்தான் உண்மையில் பெரியதாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவற்றில் 550 கிரகங்கள் பூமியை போலவே அளவு மற்றும் பாறைகள் நிறைந்தவையாக உள்ளன என்று நாசா தெரிவித்துள்ளது.


2. உலகின் அதி நவீன ராணுவம்: சீனா 2020-க்குள் அமைக்க திட்டம்


  • 2020-ஆம் ஆண்டுக்குள், சீன முப்படைகளின் அனைத்துப் பிரிவுகளும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினித் தொழில்நுட்பங்களின் உதவியுடன் முழுவதும் இயந்திரமயமாக்கப்படும்.  
.  
  • நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக, வீரர்களின் எண்ணிக்கையை 23 லட்சத்திலிருந்து 20 லட்சமாகக் குறைக்கும் நடவடிக்கைகளை சீன ராணுவம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


  • சீனா வெளியிட்டுள்ள 13-ஆவது ராணுவ மேம்பாட்டு ஐந்தாண்டுத் திட்ட (2016-2020) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


3. பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மகன் மீட்பு


  • பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுஃப் ரஸா கிலானியின் மகன் அலி ஹைதர் கிலானி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் மீட்கப்பட்டார்.


  • அமெரிக்கா மற்றும் ஆப்கன் படையினர் கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கையில்  மீட்கப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


4. பனாமா ரகசிய ஆவணங்கள் இணையதளத்தில் வெளியீடு


  • வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச புலனாய்வுப் பத்திரிகை நிருபர்கள் குழுவினர், வரி ஏய்ப்புக்கும் உதவும் வகையில் ரகசியமாக உருவாக்கப்பட்ட சுமார் 2 லட்சம் நிறுவனங்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.


  • ஒட்டுமொத்தமாக ஒரு கோடியே 15 லட்சம் ஆவணங்கள் வெளியாகியுள்ளன. 3 லட்சத்துக்கு 36 ஆயிரம் தனிநபர்கள், நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.


5. இந்தியத் தூதரை வெளியேற்றும் திட்டமில்லை: நேபாளம் அறிவிப்பு


  • நேபாளத் தூதர் உபாத்யாயவை திரும்பப் பெறுவதாக அந்நாட்டு கூறியபோதும்,  இன்னமும் தில்லியில் அவர் தனது பதவியில் நீடித்து வருகிறார். நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதர் ரஞ்சித் ரேவை வெளியேற்றும் திட்டமில்லை. இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் ஆதாரமில்லா வதந்திகள் பரப்பப்படுகின்றன, என்று நேபாள அரசு  தெரிவித்தது.
6. கச்சத் தீவில் இலங்கை கடற்படை முகாம். அறிக்கை அளிக்க இந்திய தூதருக்கு உத்தரவு


  • கச்சத் தீவில் இலங்கை ரூ. 1 கோடியில் புதிய தேவாலயத்தைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 09.05.2016, திங்கள்கிழமை நடைபெற்றது.


  • செய்திகளின் உண்மைத் தன்மை பற்றி விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கொழும்பில் உள்ள இந்தியத் தூதரை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


7. இந்தியப் பொருளாதார வளர்ச்சி நிகழாண்டில் 7.3 %ஆக இருக்கும்: ஐ.நா. அறிக்கை


  • இந்தியப் பொருளாதார வளர்ச்சி நிகழாண்டில் 7.3 சதவீதமாக இருக்கும் என்று  சர்வதேசப் பொருளாதார நிலை குறித்த ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • அடுத்த ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக அதிகரிக்கலாம்.


 நடப்பு நிகழ்வுகள்:இந்தியா


8. இந்திய ரயில்வேயின் முதல் பசுமை வழி தடம்


  • நாட்டின் முதல் பசுமை வழி தடமாக தமிழகத்தின் 114 கி. மீ. தூரமுள்ள மானாமதுரை - இராமேஸ்வரம் ரயில் பாதை அமையவிருக்கிறது .


  • சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பயோ டாயிலெட் (Bio-Toilet) வசதி வழி தடம் முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


9. தமிழ், தெலுங்கு உட்பட மேலும் 06 மொழிகளில் தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வு வினாத்தாள்


  • தமிழ், தெலுங்கு உட்பட மேலும் 6 மொழிகளில் இரண்டாம் கட்ட தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வின் வினாத்தாளை தயாரித்து வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் இறுதி முடிவெடுக்க உள்ளது.


10. நாட்டில் வறட்சியால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு ரூ.6,50,000 கோடி


  • நாட்டில் கடந்த இரு ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு இல்லை. அணைகள், நீர்த்தேக்கங்கள் பெருமளவில் வறண்டு காணப்படுகின்றன. நிலத்தடி நீரும் குறைந்துவிட்டது.  இதனால் மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது.


  • வறட்சியால் 256 மாவட்டங்களைச் சேர்ந்த 33 கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் தேசத்துக்கு பொருளாதாரரீதியாக ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.


11. கொலீஜியம் குழு அனுப்பி வைத்த முதலாவது பரிந்துரைப் பட்டியல்: உச்ச நீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள்:


  • "நீதிபதிகள் நியமன தேசிய ஆணையம்' என்ற சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்த பிறகு, கொலீஜியம் குழு அனுப்பி வைத்த முதலாவது பரிந்துரைப் பட்டியல் இதுவாகும் .


  • நீதிபதி ஏ.எம்.கான்வில்கர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி அசோக் பூஷண், மூத்த வழக்குரைஞர் எல்.நாகேஷ்வர ராவ் ஆகிய நால்வரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி 11.05.2016, புதன்கிழமை அன்று ஒப்புதல் அளித்தார்.  
.
12. இந்திய கடற்படையிலிருந்து "சீ ஹாரியர்ஸ்' (Sea Harriers) போர் விமானங்கள் விடுவிப்பு


  • இந்திய கடற்படையில் "மிக்-29கே' ரக நவீன போர் விமானங்களை பயன்படுத்த ஏதுவாக, இதுவரை பயன்பாட்டில் இருந்த "சீ ஹாரியர்ஸ்' (Sea Harriers) போர் விமானங்கள் 11.05.2016 புதன்கிழமை அன்று விடைபெற்றன.  


  • பிரிட்டன் தயாரிப்பான சீ ஹாரியர்ஸ் போர் விமானங்கள், கடந்த 1983-ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டன.


13. ஐந்தாண்டுத் திட்டத்துக்குப் பதிலாக 15 ஆண்டு தொலைநோக்குத் திட்டம்


  • நாட்டில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ள ஐந்தாண்டுத் திட்டத்துக்குப் பதிலாக 15 ஆண்டு கால தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.  


  • மத்திய கொள்கைக் குழு (NITI Aayog) தயாரித்துள்ள இந்த திட்டம் உள்நாட்டுப் பாதுகாப்பு, ராணுவம் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்.


  • இது தவிர உள்கட்டமைப்பு, வர்த்தகம், கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளுக்கும் 15 ஆண்டு தொலைநோக்குத் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் இருந்து இத்திட்டம் அமலுக்கு வருகிறது.


  • 15 ஆண்டு தொலைநோக்குத் திட்டம் தவிர 2017-18 முதல் 2023-24 வரை செயல்படுத்துவதற்கான 7 ஆண்டு செயல் திட்டம் ஒன்றையும் நிதி ஆயோக் (NITI Aayog)  வடிவமைத்துள்ளது.


14. ஆயிரம் ரூபாய் நோட்டில் அச்சாகிறது 'R' : ரிசர்வ் பேங்க் அறிமுகம்


  • இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பை மேம்படுத்த Reserve Bank of India ஏராளமான புதிய யுக்திகளைக் கையாண்டு வருகிறது. ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 'R' என்ற ஆங்கில எழுத்தை அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


  • புதிதாக அச்சடிக்கப்படும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜனின் கையெழுத்தும், 2016 என்பது பின்பிருந்து முன்பாகவும் அச்சடிக்கப்பட்டிருக்கும்.


15. இந்திய இரயில்வேயில் 02 புதிய இயக்ககங்கள் உருவாக்கம்


  • இரயில் பயணக் கட்டணத்தை தவிர்த்து, விளம்பரங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், புதிய இயக்ககம் (Non-Fare Revenue Directorate (NFR) உருவாக்கப்பட்டுள்ளது.


  • இரயில்களின் பயண வேகத்தை அதிகரிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மற்றொரு புதிய இயக்ககம் (The Mobility Directorate ) ஏற்படுத்தப்பட்டுள்ளது.


16. விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் மறுப்பு


  • பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த (ஒப்படைக்க) பிரிட்டன் மறுத்துவிட்டது.
  • தங்கள் நாட்டின் சட்ட நடைமுறைகளை மேற்கோள்காட்டி, இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறது பிரிட்டன்.



17. நேரடி மானியத்தால் ரூ.27,000 கோடி சேமிப்பு


  • நேரடி மானியத் திட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 30 கோடி பயனாளிகளுக்கு ரூ.61,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.


  • மத்திய அரசின் நேரடி மானியத் திட்டங்களால் ஒட்டுமொத்தமாக ரூ.27,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.


18. அனைத்து அவசர உதவிக்கும் இனி  "112":  ஜனவரி 2017 முதல்  அமல்


  • இந்தியாவில் பல்வேறு அவசர கால உதவிக்கு ஒரே எண்ணை கொண்டு வரும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.


  • இந்த வசதி மூலம் ஒருவர் “112” எண்ணை அழைத்தால் அது சம்பந்தப்பட்ட துறைக்கு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இந்த எண் ஜனவரி 1, 2017-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.


  • அடுத்த ஆண்டு முதல் அனைத்து செல்போன்களிலும் அவசர கால அழைப்பு பொத்தான் (Panic Button) வசதி இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


19. உத்தரகண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு வெற்றி


  • குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வரும் உத்தரகண்ட் மாநிலத்தில், ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, அம்மாநில சட்டப்பேரவையில் நடைபெற்றது.


  • நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு வெற்றி பெற்றதை அது உச்ச நீதிமன்றத்தில் முறைப்படி அறிவித்தது.  இதன் மூலம், உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
20. செல்போன் அழைப்பு துண்டிப்புக்கு இனி இழப்பீடு கிடைக்காது: TRAI சட்டத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்


  • செல்போன் அழைப்புகள் தானாக துண்டிக்கப்படுவதற்கு இழப்பீடு வழங்குவதை கட்டாயப்படுத்திய TRAI சட்டத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். தொலைத்தொடர்பு  நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


21. நாட்டில்  31 லட்சம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு


  • நாடெங்கிலும் 31.62 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து, 29,993 தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு தற்போது இயற்கை எரிவாயு வழங்கப்படுகிறது.


  • அடைக்கப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) அல்லது குழாய் மூலமான இயற்கை எரிவாயு (PNG) என இரண்டு பிரிவுகளைக் கொண்ட நகர எரிவாயு விநியோக (CGD) திட்டத்துக்கு உரிமம் வழங்குவதற்காக இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் கடந்த 2006-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டு அதன்படி ஆணையமும் அமைக்கப்பட்டது


22. தெலங்கானாவில் அனல் காற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 260-ஆக உயர்வு


  • தெலங்கானாவில் அனல் காற்று வீசி வருவதன் காரணமாக, இதுவரை 260 பேர் உயிரிழந்துனர். அதிகபட்சமாக, நல்கொண்டா மாவட்டத்தில் 80 பேர் உயிரிழந்துவிட்டனர்.




23. விமானக் கடத்தல் தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்


  • விமானக் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் விமானக் கடத்தல் தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் 09.05.2016 திங்கள்கிழமை நிறைவேறியது.  


  • விமானக் கடத்தல் தடுப்பு மசோதாவின்படி, விமான ஊழியர்கள், பயணிகள், பாதுகாப்பு வீரர்களைத் தவிர, விமான நிலைய ஊழியர்கள் உள்பட எந்த நபர் இறக்க நேர்ந்தாலும், விமானக் கடத்தலில் ஈடுபடுபவருக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


24. நாடு முழுவதும் நடப்பாண்டிலேயே மருத்துவ பொது நுழைவுத் தேர்வு (NEET) கட்டாயம்


  • நடப்பாண்டிலேயே நாடு முழுவதும் சீரான முறையில் மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு வகை செய்யும் "தேசிய தகுதி, நுழைவுத் தேர்வு' (NEET) கட்டாயம்' என்று உச்ச நீதிமன்றம் 09.05.2016,  திங்கள்கிழமை அன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.


  • இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கேரளம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநில அரசுகளும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் விடுத்த கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


25. வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் ஒடிஸாவில் தொடக்கம்


  • மாநிலத்தில் அட்சய திருதியை நாளைக் கொண்டாடும் விதமாக வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு நேரடியாக மானிய உதவியை வழங்கும் திட்டத்தை ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் 09.05.2016,  திங்கள்கிழமை அன்று திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.


  • மாநில அளவிலான விவசாயிகள் தினத்தையொட்டி புரி மாவட்டம், பிபிலியில் லட்சுமிநாராயண்பூர் கிராமத்தில் இத்திட்டத்தை அவர் தொடங்கினார்.


26. 55,000 கிராமங்களுக்கு 2019-க்குள் செல்லிடப்பேசி இணைப்புகள்:மத்திய அரசு திட்டம்


  • இந்தியாவின் கிராமப்புறங்களை அகண்ட வரிசை தொலைத் தொடர்பு வசதி மூலம் இணைப்பதற்காக, கடந்த ஏப்ரல் 25,2016 முதல் 48,199 கிராம ஊராட்சிகளில் ஒளியிழை (OPTICAL FIBER) பதிக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன.


  • மேலும் 55,699 கிராமங்களுக்கு வரும் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் செல்லிடப்பேசி இணைப்புகளை வழங்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது


 நடப்பு நிகழ்வுகள்:தமிழகம்


27. அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ஒத்திவைப்பு


  • தமிழகத்தில் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இங்கு மே 16ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருந்தது.


  • கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது, உள்ளிட்ட காரணங்களால் அரவக்குறிச்சியில் தேர்தல் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெறாது என தேர்தல் ஆணையம் கருதுகிறது. எனவே மே 23ஆம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
28. தமிழகத்தில் காலியாகும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு ஜூன் 11-இல் தேர்தல்


  • தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி உள்பட இந்தியா முழுவதும் 15 மாநிலங்களில் காலியாகும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகளுக்கு வரும் ஜூன் 11-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


29. 2015ம் ஆண்டுக்கான குடிமைப் பணித் (சிவில் சர்வீஸ்) தேர்வுக்கான வெளியீடு


  • 2015ம் ஆண்டுக்கான குடிமைப் பணித் (CIVIL SERVICE) தேர்வுக்கான இறுதி முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது.


  • ஐஏஎஸ் (180 பேர்), ஐஎஃப்எஸ் (45 பேர்), ஐபிஎஸ் (150) மற்றும் குரூப் ஏ (728) மற்றும் குரூப் பி (61) என  குடிமைப் பணித் தேர்வில்  1078 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.


  • இதில் டினா டாபி முதலிடம் பிடித்தார். அத்தர் அமீர் உல் ஷரி கான் இரண்டாம் இடத்தையும், ஜஸ்மீத் சிங் சந்து மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.


  • தமிழக அளவில் சரண்யா ஹரி முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 7வது இடத்தையும் பிடித்துள்ளார்.


30. சென்னை மெட்ரோ ரயில்: சிறப்பு பார்வை


  • சென்னை கோயம்பேடு - ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை கடந்தாண்டு ஜூன் 29, 2015  தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
  • கோயம்பேடு - ஆலந்தூர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையில் கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர் ஆகிய 07 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன.


  • நடப்பாண்டு மார்ச் மாதத்தில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 987 பேரும், ஏப்ரல் மாதத்தில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 418 பேரும் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.


  • சென்னை வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் இடையே 23.1 கி.மீ. தொலைவுக்கு முதல் வழித்தடமும், சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 22 கி.மீ. தொலைவுக்கு 2-வது வழித்தடமும் அமைக்கத் திட்டமிடப்பட்டது. மொத்தம் 45.1 கி.மீ. தொலைவுக்கு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.


  • கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது இதன் மதிப்பீடு ரூ. 14,600 கோடியாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட காலதாமதத்தால் தற்போது திட்ட மதிப்பீடு ரூ. 20 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  


  • இதற்கான நிதியை மத்திய அரசு பங்கு மூலதனமாக 15 சதவீதமும் சார்நிலைக் கடனாக 5 சதவீதமும் வழங்குகிறது. தமிழக அரசு பங்கு மூலதனமாக 15 சதவீதமும், சார்நிலைக் கடனாக 5.78 சதவீதமும் வழங்குகிறது. மீதமுள்ள 59.22 சதவீத நிதி, ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையிடமிருந்து கடனாகப் பெறப்படுகிறது.


31. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 320 பெண் வேட்பாளர்கள்,  திருநங்கைகள் இருவர்  போட்டி


  • 2016ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 19ம் தேதி நடைபெறும். தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில், 320 பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


  • இதுவரை நடைபெற்ற தேர்தல்களில்,போட்டியிட்ட பெண்களின் அதிகபட்ச எண்ணிக்கை இதுவேயாகும். மேலும், இந்தத் தேர்தலில் திருநங்கைகள் இருவர் போட்டியிடுகின்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திருநங்கைகள் களம் காண்பதும் இதுவே முதல் முறையாகும்.


 நடப்பு நிகழ்வுகள்:விளையாட்டு


32. அர்ஜூனா விருது, மேஜர் தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது பரிந்துரைகள்


  • அர்ஜூனா விருதுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ரிது ராணியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


  • சிறந்த வீரர்களுக்கான அர்ஜூனா விருதுக்கு இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள் ரகுநாத், தரம்வீர் சிங் ஆகியோ ரது பெயர்கள் பரிந்துரை செய் யப்பட்டுள்ளது. மேஜர் தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு முன்னாள் வீரர் டங் டங் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


  • சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியா விருதுக்கு சி.ஆர்.குமார் பரிந்துரைக்கப் பட்டுள்ளார்.


32. BCCI தலைவர் சஷாங்க் மனோகர் ராஜினாமா


  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் (BCCI) தலைவர் பதவியை சஷாங்க் மனோகர் ராஜினாமா செய்தார். இவர் விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது சஷாங்க் மனோகர் ICC சேர்மனாக இருந்து வருகிறார்.
33. செர்பியா வீரர் ஜோகோவிச் 29 பட்டங்கள் வென்று சாதனை


  • மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் மாஸ்டர்ஸ் தொடரில் 28 பட்டங்கள் வென்றிருந்த நடாலின் சாதனையை முறியடித்தார்.


  • மாஸ்டர்ஸ் அந்தஸ்து பெற்ற தொடரில் அவர் வெல்லும் 29-வது பட்டம் இதுவாகும். இதன் மூலம் மாஸ்டர்ஸ் தொடரில் 28 பட்டங்கள் வென்றிருந்த நடாலின் சாதனையை முறியடித்தார்.


34. ஆசிய இளைஞர் குத்துச் சண்டை போட்டி இந்தியாவுக்கு 4 பதக்கங்கள்


  • 07-வது ஆசிய இளைஞர் குத்துச் சண்டை போட்டி கஜகஸ்தானில் நடைபெற்றது. இதில் இந்தியா வுக்கு 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்கள் வென்று இந்தியா 3வது இடத்தை பிடித்தது..


  • தேசிய சாம்பியனான அங் குஷ் தஹியா 60 கிலோ எடை பிரிவிலும், ஆஷிஸ் குல்கிர்யா 64 கிலோ எடை பிரிவிலும், ரியால் புரி 81 கிலோ எடை பிரிவிலும் வெள்ளி பதக்கம் கைப்பற்றினர். 91 கிலோவுக்கு அதிகமான எடை பிரிவில் மன்ஜித் சிங் வெண்கல பதக்கம் வென்றார்.


35. ஒலிம்பிக்கிற்கான இந்திய அணியில் 90 வீரர்கள்


  • ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் இதுவரை இல்லாத அளவில் இந்தமுறை 90 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.


  • 58 பேர் தனிநபர் போட்டிக்கான பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இந்திய ஹாக்கி அணி வீரர்/வீராங்கனைகள் 32 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.




36. தேசிய ஜூனியர் கூடைப்பந்து: தமிழகம், கர்நாடகம் சாம்பியன்


  • புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய ஜூனியர் கூடைப்பந்து போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழகமும், மகளிர் பிரிவில் கர்நாடகமும் சாம்பியன் பட்டம் வென்றன.


  • புதுச்சேரி உப்பளம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டரங்கில் 67-ஆவது அரைஸ் தேசிய ஜூனியர் கூடைப்பந்து போட்டி கடந்த 1.05.2016-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.


37. ஐரோப்பிய கால்பந்து சம்மேளன தலைவர் மைக்கேல் பிளாட்டினி ராஜிநாமா


  • ஃபிஃபா ஊழல் வழக்கு விசாரணையில் 4 ஆண்டு தடை உறுதியாகிருப்பதால், அடுத்த 4 ஆண்டுகளுக்கு கால்பந்து தொடர்பான எந்த செயல்பாடுகளிலும் பிளாட்டினி ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


  • இதைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஜூன் 10-ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்த பிளாட்டினி, இப்போது அந்தப் போட்டியை நேரில் சென்று காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


38. IPL T20, 2016 கிரிக்கெட்: டிவில்லியர்ஸ்-கோலி ஜோடி சாதனைகள்


  • டிவில்லியர்ஸ்-கோலி ஜோடி குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக குவித்த 229 ரன்கள்தான் T20 கிரிக்கெட்டில் ஒரு ஜோடியால் 2-ஆவது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்.


  • T20 கிரிக்கெட்டில் இரு முறை 200 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே ஜோடி டிவில்லியர்ஸ்-கோலி ஜோடிதான். இந்த ஐபிஎல் தொடரில் கோலி 3 சதங்களை விளாசியுள்ளார். இதன்மூலம் ஒரு டி20 தொடரில் அதிக சதங்களை விளாசியவர் என்ற சாதனையை மைக்கேல் கிளிங்கருடன் பகிர்ந்து கொண்டார் கோலி.


39. தாமஸ் கோப்பை 15.05.2016 இன்று தொடக்கம்


  • தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டி சீனாவின் குன்ஷான் நகரில் 15.05.2016  ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.


  • இந்தப் போட்டியில் கடந்த முறை வெண்கலம் வென்ற சாய்னா தலைமையிலான இந்திய மகளிர் அணி பங்கேற்கிறது.


40. டைமன்ட் லீக் தடகளப் போட்டி: சுதா சிங் தேசிய சாதனை


  • மகளிர் 3,000 மீ. ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்தியாவின் சுதா சிங் தேசிய சாதனைப் படைத்துள்ளார்.  


  • டைமன்ட் லீக் தடகளப் போட்டியின் 2-ஆவது "லெக்' சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்றது. இதில் மகளிர் 3,000 மீ. ஸ்டீபிள் சேஸ் பிரிவில் பங்கேற்ற சுதா சிங் 8-ஆவது இடத்தைப் பிடித்தார்.  



41. ஐசிசி கிரிக்கெட் குழு தலைவராக அனில் கும்ப்ளே மீண்டும் தேர்வு: உறுப்பினரானார் திராவிட்


  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) கிரிக்கெட் குழுத் தலைவராக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே  மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  


  • ராகுல் திராவிட், அந்தக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரோடு, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மகிள ஜெயவர்தனேவும் உறுப்பினராக்கப்பட்டுள்ளார். இவர்களது பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.
42. ஐசிசி தலைவராக சஷாங்க் மனோகர் தேர்வு


  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) வாரியம் சாரா முதல் தலைவராக சஷாங்க் மனோகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சஷாங்க் மனோகர் ஐசிசி தலைவராக நீடிப்பார்.


<ALL THE BEST>



0 comments:

Post a Comment

Links