About & Social

Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC Current Affairs May 1-7, 2016

நடப்பு நிகழ்வுகள் மே 1-7, 2016


CURRENT AFFAIRS MAY 1-7, 2016 (TAMIL)


நடப்பு நிகழ்வுகள்:உலகம் 


1. இலண்டனின் முதல் முஸ்லிம் மேயரானார் பாகிஸ்தான் வம்சாவளி சாதிக் கான்
  • லண்டனில் நடைபெற்ற மேயர் தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த 45 வயதான சாதிக் கான் அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம், அந்த நகரின் மேயராகப் றுபேற்கும் முத முஸ்ம் என்ற பெருமையை அவர் பெறுகிறார். 
2. இலங்கையில் தமிழர்கள் மீதான சித்ரவதை தொடர்கிறது: ஐ.நா. அதிகாரி 
  • இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை குறித்து ஆய்வு செய்ய சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக ஜுவான் மென்டீஸ் ஐ.நா. நியமித்தது. 
  • இவர் இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து தனது அறிக்கையை தயாரித்து வருகிறார். தமிழர்கள் மீதான சித்ரவதை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுதொடர்பான முழு விவரங்கள் இலங்கை அரசிடம் அளிக்கப்படும் என்றார் ஜுவான் மென்டீஸ். 
3. அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஆகிறார் டோனால்டு டிரம்ப் 
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டோனால்டு டிரம்ப் தேர்வாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவருக்குப் போட்டியாக களமிறங்கிய டெட் குரூஸ் போட்டியிலிருந்து விலகினார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெறுகிறது. 
4. சீனா: யுவானின் மதிப்பு மேலும் குறைப்பு
  • டாலருக்கு நிகரான தனது நாணயத்தின் மதிப்பை சீனா 0.6 % குறைத்துள்ளது. இதன்படி, ஒரு டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பை 6.4565 யுவானிலிருந்து, 6.4943-ஆக சீன ரிஸர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளது. 
5. "செக்கியா': செக் குடியரசுக்கு புதிய பெயர்
  • மத்திய ஆப்பிரிக்க நாடான செக் குடியரசுக்கு "செக்கியா' என்று புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. 
  • கடந்த 1993-ஆம் ஆண்டு ஸ்லோவேகியாவிடமிருந்து பிரிந்த செக் குடியரசுக்கு அத்தகைய ஒற்றைச் சொல் பெயர் இல்லாமல் இருந்து வந்தது. இனி அதிகாரப்பூர்வ "செக் குடியரசு' என்ற பெயருடன், "செக்கியா' என்ற ஒற்றைச் சொல் பெயரிலும் அந்த நாடு அழைக்கப்படும். 
6. சுட்டெரிக்க ‘எல் நீனோ’, மூழ்கடிக்க வருகிறது ‘லா நீனா’
  • ஆசிய நாடுகளை வாட்டியெடுத்து வரும் வெப்ப சலனத்தின் “எல் நீனோ” தாக்கம் இந்த ஆண்டு மத்தியில் குறைந்தாலும், அதனைத் தொடர்ந்து வரும் "லா நீனா' என்ற குளிர் சலனம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும், "லா நீனா' காரணமாக, கடுமையான மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும், வெப்ப சலனத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைவிட அது மிகக் கடுமையானதாக இருக்கக் கூடும். 
7. இந்தியா-பப்புவா நியூ கினியா இடையே விவசாய ஆராய்ச்சி, சுகாதாரத் துறைகளில் ஒப்பந்தம்

  • பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக சென்ற பிரணாப் முகர்ஜி, போர்ட் மொரெஸ்பி நகரில் அந்நாட்டு கவர்னல் ஜெனரல் சர் மைக்கேல் ஓகியோவை சந்தித்துப் பேசினார். 
  • இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், சர்வதேச விவகாரங்கள், பயங்கரவாதம் உள்ளிட்ட பிராந்திய விவகாரங்கள், விவசாய ஆராய்ச்சி, சுகாதாரத் துறைகளில் ஒப்பந்தம் ஏற்பட்டது. 
8. பப்புவா நியூ கினியா மாகாண ஆளுநராக தமிழர்
  • பப்புவா நியூ கினியா நாட்டிலுள்ள வெஸ்ட் நியூ பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக சிவகாசியைச் சேர்ந்த 41 வயதான தமிழர் சசீந்திரன் முத்துவேல் உள்ளார். 
நடப்பு நிகழ்வுகள்: இந்தியா & தமிழகம்

9. கடற்படையின் புதிய தளபதியாக சுனில் லாம்பா நியமனம் 
  • இந்தியக் கடற்படையின் தற்போதைய தலைமைத் தளபதி ஆர்.கே.தோவன் ஓய்வுபெற உள்ளதை முன்னிட்டு, புதிய தளபதியாக சுனில் லாம்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மே மாதம் 31-ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ள அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். 
10. 2016 நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.வி.தாமஸ்
  • 2016-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.வி.தாமஸ் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அண்மையில் நியமித்துள்ளார். 
  • இதற்கு முன்பு 2014, 2015-ஆம் ஆண்டுகளிலும் கே.வி.தாமஸ் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 22 உறுப்பினர்களைக் கொண்ட இந்த நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவில் 15 பேர் மக்களவையிலிருந்தும், 07 பேர் மாநிலங்களவையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 
11. உத்தராகண்ட் மாநிலத்தில் காட்டுத் தீ
  • உத்தராகண்ட் மாநிலத்தில் சுமார் 2,269 ஏக்கர் வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றியிருக்கிறது. மொத்தம் 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 
12. விஜய் மல்லையா ராஜிநாமா ஏற்பு 
  • ரூ.9,400 கோடி வங்கிக் கடன் மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள அவர், வருமான வரித் துறை, மத்திய அமலாக்கத் துறை, வங்கிகள் மோசடி விசாரணை அமைப்பு ஆகியவற்றின் வழக்குகளை பிரிட்டனில் இருந்து எதிர்கொண்டு வருகிறார். விஜய் மல்லையா புதிதாக அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, அவரது ராஜிநாமாவை மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி ஏற்றுக் கொண்டார். விஜய் மல்லையாவின் மாநிலங்களவை எம்.பி. பதவிக் காலம், வரும் ஜூலை 1-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 
13. சமையல் எரிவாயு மானியம் ரூ.21ஆயிரம் கோடி சேமிப்பு
  • கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், சமையல் எரிவாயு மானியம் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் சமையல் எரிவாயு மானியம் நேரடியாக ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதாலும், போலி சமையல் எரிவாயு இணைப்புகள் நீக்கப்பட்டதாலும் ரூ.21ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
14. மாநிலங்களவைக்கான 07-ஆவது உறுப்பினர் பிரணவ் பாண்ட்யா
  • மாநிலங்களவை உறுப்பினராக அகில உலக காயத்ரி பரிவார் ஆன்மிக அமைப்பின் தலைவர் பிரணவ் பாண்ட்யா நியமிக்கப்பட்டார். 
  • பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நியமனம் செய்யும் மாநிலங்களவைக்கான 07-ஆவது உறுப்பினர் பாண்ட்யா ஆவார். இதற்கு முன்பு, சுப்பிரமணியன் சுவாமி, மேரி கோம், சுரேஷ் கோபி உள்ளிட்ட 6 பேர் கடந்த மாதம் 22-ஆம் தேதி மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டனர். 
15. தெலங்கானா: வெயில் கொடுமைக்கு 219 பேர் பலி
  • தெலங்கானா மாநிலத்தின் சில பகுதிகளில் இன்னமும் வெயிலின் தாக்கம் உள்ளது. வெயிலின் கொடுமைக்கு 02.05.2016 வரை 178 பேர் உயிரிழந்தனர். தற்போது, உயிரிழப்பு 219-ஆக அதிகரித்துள்ளது. இதை 3 பேர் கொண்ட குழு உறுதி செய்துள்ளது. இதில், நல்கொண்டா மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 76 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்ததாக, மெஹபூப்நகரில் 35 பேர் உயிரிழந்தனர். 
16. 104 கிராமங்களுக்கு "தீனதயாள் உபாத்யாய கிராம ஜோதி யோஜனா" திட்டத்தின் கீழ் மின்சார வசதி 
  • வரும் 2018-ஆம் ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதிக்குள் மின்சார வசதியில்லாத 18,452 கிராமங்களுக்கு புதிதாக மின்சார வசதி செய்து தருவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 
  • ஏப்ரல் 25 முதல் மே 1 வரை மட்டும் மேலும் 104 கிராமங்களுக்கு தீனதயாள் உபாத்யாய கிராம ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது. புதிதாக மின்சார வசதி செய்து தரப்பட்டிருக்கும் கிராமங்களின் எண்ணிக்கை 7,549-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்தது 
17. 05 கோடி ஏழைகளுக்கு இலவச LPG இணைப்பு திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்
  • உத்தரப் பிரதேச மாநிலம், பலியாவில் "பிரதம மந்திரி உஜ்வலா யோஜனா' என்ற பெயரிலான ஏழைகளுக்கு ரூ.8,000 கோடி செலவில் 5 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்பு (LPG) வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா 01.05.2016 ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். 
  • இத்திட்டத்தின் முதலாம் ஆண்டில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் பெயரில் 1.5 கோடி இலவச இணைப்புகள் அளிக்கப்படும். அதன்படி, திட்டத்தின் மொத்த இலக்கான 5 கோடி இணைப்புகள் என்பது அடுத்த 3 ஆண்டுகளில் எட்டப்படும். 
18. பொருளாதார ரீதியாக நலிவுற்றோருக்கு இடஒதுக்கீடு: குஜராத்தில் அவசரச் சட்டம் 
  • பொதுப் பிரிவினரில் பொருளாதார ரீதியாக நலிவுற்றோருக்கு 10 % இடஒதுக்கீடு வழங்கும் வகையில் குஜராத் மாநில அரசு அவசர ச்சட்டம் பிறப்பித்தது. பதவி உயர்வில் இந்த இடஒதுக்கீடு கிடையாது. புதிய இடஒதுக்கீட்டால், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் இடஒதுக்கீடு பாதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
19. எம்.ஏ. அரசியல் அறிவியலில் பிரதமர் மோடி முதல் வகுப்பில் தேர்ச்சி 
  • பிரதமர் மோடி கடந்த 1983-ஆம் ஆண்டில், எம்.ஏ. அரசியல் அறிவியல் பாடத்தில் 800-க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து, 62.3 சதவீத மதிப்பெண்களுடன் குஐராத் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். 1978-இல், பி.ஏ. பட்டப் படிப்பை முடித்தாக தில்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 
20. காஸ் சிலிண்டருக்கான மானியத்தை 6.47 லட்சம் பேர் விட்டுக்கொடுத்துள்ளனர்: தென்னிந்தியாவில் தமிழகம் 2-வது இடம்
  • வசதி படைத்தோர் மானியத் தொகையை விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை மத்திய அரசு 2014-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி தொடங்கியது. பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலியில், ‘மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் கோரிக்கைவிடுத்து வருகிறார். 
  • நாட்டில் 15.34 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. இதில், கர்நாடக மாநிலத் தில் 6.96 லட்சம் பேர் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளதன் மூலம் அம்மாநிலம் முதலிடத்தைப் பிடித் துள்ளது. தமிழகத் தில் 6.47 லட்சம் பேர் மானியத் தொகையை விட்டுக் கொடுத்து 2-ம் இடம் பிடித்துள்ளது. தெலங்கானா வில் 3.47 லட்சம் பேரும், கேரளாவில் 2.83 லட்சமும், ஆந்திராவில் 2.36 லட்சம் பேரும் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். 
21. தமிழக தேர்தல் களத்தில் 3,794 வேட்பாளர்கள் 
  • தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், 234 தொகுதிகளில் 3,794 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 3,472 பேர் ஆண்கள். 320 பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் 
22. 26 ஆயிரம் பேர் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதினர்
  • தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை 26 ஆயிரம் பேர் எழுதினர் 
நடப்பு நிகழ்வுகள்: விளையாட்டு

23. 2016 IPL போட்டி: இரு சதம் அடித்த விராட் கோலி
  • 2016 IPL ஒரே சீசனில் இரு சதங்களை விளாசிய முதல் கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார் பெங்களூர் கேப்டன் விராட் கோலி. ஒரு சீசனில் அதிவேகமாக 500 ரன்களை எட்டியவர் என்ற சாதனையும் கோலியின் வசமாகியுள்ளது. 
24. ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 04-ஆவது இடம்
  • ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்று 04-ஆவது இடத்தைப் பிடித்தது. 
  • ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் மே 5 வரை ஜெர்மனியின் சூல் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 48 நாடுகளைச் சேர்ந்த 585 பேர் பங்கேற்றனர். இதில் 24 நாடுகள் மட்டுமே பதக்கப் பட்டியலில் இடம்பிடித்தன. 
25. ஒலிம்பிக் மல்யுத்தம்: வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் தகுதி
  • ரியோ-டி-ஐெனிரோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், 48 கிலோ எடைப் பிரிவிலும் சாக்ஷி மாலிக் 58 கிலோ எடைப் பிரிவிலும் தகுதி பெற்றுள்ளனர். 
26. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல்வெளியீடு
  • ஆண்டுதோறும் வருடாந்திர வெளியிடப்படும் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 2-ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 3-ஆவது இடத்திலும் உள்ளன. 
27. இங்கிலீஷ் பிரீமியர் லீக் லீசெஸ்டர் அணி முதல்முறையாக சாம்பியன்
  • 132 ஆண்டுகால இங்கிலீஷ் பிரீமியர் லீக் (English Premier League) கால்பந்து வரலாற்றில் லீசெஸ்டர் அணி முதல்முறையாக சாம்பியனாகியிருக்கிறது. 
28. ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜூனா விருதுக்கான பரிந்துரைகள்
  • 2015-16ஆம் ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலியும் அர்ஜூனா விருதுக்கு ரஹானேவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்கள். 
29. சானியா மிர்சாவின் சுயசரிதை
  • இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சுயசரிதை "ஏஸ் அகைன்ஸ்ட் ஆட்ஸ்' (Ace Against Odds) என்ற பெயரில் வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ளதாக ஹார்பெர் காலின்ஸ் பதிப்பகம் தெரிவித்துள்ளது. இதை சானியாவும், அவருடைய தந்தை இம்ரான் மிர்சாவும் இணைந்து எழுதியுள்ளனர். 
30. இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம்
  • இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாடவுள்ளதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.கடைசி 6 ஆண்டுகளில் 4-ஆவது முறையாக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது இந்திய அணி. 
31. ஒலிம்பிக்: இந்திய அணியின் நல்லெண்ணத் தூதர் - சச்சின் டெண்டுல்கர்
  • 31-வது ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறுகிறது. 
  • ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக சல்மான்கான், அபினவ் பிந்த்ரா ஆகியோரைத் தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய நல்லெண்ணத் தூதரானார் சச்சின் நியமிக்கப்பட்டார். 
32. ஒலிம்பிக் பாட்மிண்டன்: 07 இந்தியர்கள் தகுதி 
  • ரியோ டி ஜெனிரோ (2016) ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் பிரிவில் பங்கேற்க. இந்தியாவில் இருந்து சாய்னா நெவால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் (3 பேரும் ஒற்றையர் பிரிவு), ஜுவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா (மகளிர் இரட்டையர் பிரிவு), மானு அத்ரி, சுமித் ரெட்டி (ஆடவர் இரட்டையர் பிரிவு) ஆகியோர் 07 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். 
33. உலகக் கோப்பை வில்வித்தை:இந்தியாவுக்கு 03 பதக்கங்கள் 
  • சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய அணி ஒரு வெள்ளி, இரு வெண்கலம் என 03 பதக்கங்களை வென்றது. 
  • மகளிர் பிரிவில் தீபிகா குமாரி, பம்பேலா தேவி வெள்ளி பதக்கம் வென்றனர். ஆடவர் ரீகர்வ் பிரிவில் அதானு தாஸ், ஜெயந்தா தலுக்தார், மங்கள் சிங் ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவு தீபிகா குமாரி-அதானு தாஸ் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். 
34. தேசிய ஜூனியர் கூடைப்பந்து போட்டி 


  • 67-ஆவது தேசிய ஜூனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி புதுவை உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டரங்கில் தொடங்கியது.


0 comments:

Post a Comment

Links