About & Social

Current Affairs 2019 Government Jobs Study Materials
Current Affairs Quiz 2019 General Tamil General Science
History Indian Polity Geography
14500 Model Questions Answers General Knowledge Maths/Aptitute

TNPSC Current Affairs Quiz in Tamil - June 5 -12, 2016

1. இந்தியா,ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் 20-வது கப்பற்படை கூட்டுப் பயிற்சியின் பெயர் என்ன?
(a) இந்தியா,ஜப்பான்,அமெரிக்கா கூட்டு கப்பற்படைபயிற்சி
(b) மலபார் கூட்டு கப்பற்படைபயிற்சி
(c) ஹீரோஹோவா கப்பற்படைபயிற்சி
(d) ஜலதரா கப்பற்படைபயிற்சி

2.இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்த எல்லைக்கோட்டை கண்காணிக்கும் ஐ.நா. ராணுவ பார்வையாளர் UNMOGIP (United Nations Military Observer Group in India and Pakistan) குழுவின் புதிய தலைவர் யார்?
(a) மேஜர் ஜெனரல் பெர் கஸ்டாப் லோடின்
(b) மேஜர் ஜெனரல் தாமஸ் குப்டில்
(c) மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாயகே
(d) மேஜர் ஜெனரல் ஹு ஜிந்தா கொவ்

இந்தியா-பாகிஸ்தான் இடை யிலான போர் நிறுத்த எல்லைக் கோட்டை கண்காணிக்கும் ஐ.நா. ராணுவ பார்வையாளர் குழுவின் UNMOGIP (United Nations Military Observer Group in India and Pakistan) புதிய தலைவராக ஸ்வீடன் நாட்டு ராணுவ உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் பெர் கஸ்டாப் லோடின் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, ஜம்மு காஷ்மீர் பகுதியில் நடைமுறையில் உள்ள இந்தியா பாகிஸ்தான் இடை யிலான போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுகிறதா என்பதை UNMOGIP கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்து வருகிறது.
3. சமீபத்தில் TIME இதழின் "புதிய படைப்புகள் மூலம் உலகை மாற்றியவர்கள்" பட்டியலில் இடம்பிடித்த இந்தியர் யார்?
(a) ஜவஹர்லால் நேரு
(b) குல்தீப் நய்யார்
(c) சுந்தர் பிச்சை
(d) உமேஷ் சச்தேவ்

தங்களது புதிய படைப்புகள் மூலம் உலகை மாற்றியவர்கள் என்ற பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்திய மென்பொருள் நிபுணர் உமேஷ் சச்தேவ் இடம்பெற்றுள்ளார். அவசரகால உதவி மையங்களுக்கு தொடர்பு கொள்ளும் மக்கள், தங்களது உள்ளூர் மொழியில் பேசுவதை, தொலைபேசியின் மறுமுனையில் கேட்பவர் புரிந்து கொள்ளும் வகையில் மாற்றும் மென்பொருளை அறிமுகம் செய்த சாதனைக்காக இடம்பெற்றுள்ளார்.
4. தற்போது அமெரிக்காவின் ஜனநாயககட்சியின் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
(a) பாரக் ஒபாமா
(b) டொனல்ட் திரும்ப்
(c) ஹிலாரி கிளிண்டன்
(d) கண்டலிசா ரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஆளும் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்ய உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அமெரிக்காவின் ஜனநாயககட்சி அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு பெற்றுள்ளார்.
5. அமெரிக்காவின் வர்த்தக இதழான ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள நிகழாண்டுக்கான உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் யார்?
(a) அருந்ததி பட்டாசார்யா, சந்தா கோச்சார், மஜும்தார் ஷா, ஷோபனா பார்தியா
(b) அருந்ததி பட்டாசார்யா, சந்தா கோச்சார், மஜும்தார் ஷா, ஷோபா டே
(c) சந்தா கோச்சார், மஜும்தார் ஷா, ஷோபனா பார்தியா, அருந்ததி ராய்
(d) அருந்ததி ராய், சந்தா கோச்சார், மஜும்தார் ஷா, ஷோபனா பார்தியா

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தொழில் வர்த்தக இதழான ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள நிகழாண்டுக்கான உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 4 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில், பாரத ஸ்டேட் வங்கி நிர்வாக இயக்குநர் அருந்ததி பட்டாசார்யா, ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார், பயோகான் மருந்து நிறுவனத் தலைவர் மஜும்தார் ஷா, ஹெச்.டி. ஊடக நிறுவனத் தலைவர் ஷோபனா பார்தியா ஆகிய இந்தியப் பெண்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
6. சமீபத்தில் பிரதமர் மோடி எந்த நாட்டின் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்?
(a) சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில்
(b) சீனா நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில்
(c) மெக்ஸிகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில்
(d) அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில்

மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திரமோடி அந்த நாட்டு அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். உலகத் தலைவர்களில் மிகச் சிலருக்கு மட்டுமே அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசும் கவுரவம் அளிக்கப்படுகிறது. இதற்கு முன்பு முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி (1985), நரசிம்மராவ் (1994), வாஜ்பாய் (2000) மன்மோகன் சிங் (2005) ஆகியோர் கூட்டுக் கூட்டத்தில் பேசியுள்ளனர்.
7. சமீபத்தில் பிரதமர் மோடியை எந்த நாட்டின் அதிபர் தனது காரில் உணவகத்துக்கு அழைத்து சென்றார்?
(a) அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா
(b) மெக்சிகோ அதிபர் என்ரிக் பினா நீட்டோ
(c) சுவிஸ் அதிபர் ஜோஹன் ச்ச்னெஇடெர் அம்மான்
(d) ஆப்கான் அதிபர் அமீத் கர்சாய்

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு மெக்சிகோ நாட்டுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் என்ரிக் பினா நீட்டோ அவரது காரில் உணவகத்துக்கு அழைத்துச் சென்றார். இருவரும் குவின்டோனில் என்ற உணவகத்தில் இரவு உணவு அருந்தினர். இருவரும் மெக்சிகோ நாட்டின் சிறப்பு உணவான பீன் டாக்கோஸ் உண்டனர்.
8. ஆப்கானிஸ்தானில் பிரதமர் மோடி திறந்துவைத்த 'நட்புறவு அணையின் பெயர் என்ன?
(a) சல்மா அணை - ஹெராட் மாகாணம், ஆப்கானிஸ்தான்
(b) குவெகம் அணை - ஹெராட் மாகாணம், ஆப்கானிஸ்தான்
(c) பசார் அணை - ஹெராட் மாகாணம், ஆப்கானிஸ்தான்
(d) ராவல்தான் அணை - ஹெராட் மாகாணம், ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராட் மாகாணத்தில் உள்ள சல்மா அணையை பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனியுடன் இணைந்து தொடக்கிவைத்தார். இந்த அணைக்கு தற்போது 'நட்புறவு அணை' என பெயரிடப்பட்டுள்ளது.
9. 9. இந்தியா-ரஷியா கூட்டுத் தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணைகளை, இந்தியா எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது?
(a) ஜெர்மனி
(b) ஜப்பான்
(c) வியட்நாம்
(d) கிர்கிஸ்தான்

இந்தியா-ரஷியா ஆகிய நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவான பிரம்மோஸ் ரக ஏவுகணை ஒலியை விட 3 மடங்கு அதிக வேகமாகப் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்கைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட பிரம்மோஸ் ஏவுகணையை, வியட்நாம் நாட்டுக்கு விற்பனை செய்வதற்கு இந்தியாவும், ரஷியாவும் முடிவு செய்திருகின்றன.
10. மாதந்தோறும் ஜூன் 21-ந்தேதி யோகா தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ள இந்திய மாநிலம் எது?
(a) கர்னாடக அரசு
(b) மராட்டிய அரசு
(c) மத்யப்ரதேச அரசு
(d) ராஜஸ்தான் அரசு

ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் 21-ந்தேதியை யோகா தினமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கொண்டாட மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.

0 comments:

Post a Comment

Links